சோமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 04:07
பரமக்குடி: பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி சோமநாதபுரம் நெசவாளர் காலனியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி ஜூலை 6 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் மூன்று காலையாக பூஜைகள் நிறைவடைந்தது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் யாக கால பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயில் விமானங்களை அடைந்தன. அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விமான கலசங்களுக்கு காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.