திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் இதுவரை 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி . அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்திய கொந்தகையில் 3 கட்ட அகழாய்விலும் சேர்த்து சிறியதும், பெரியதுமான 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வில் 30க்கும் மேற்பட்ட முதுமக்கள தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வில் எடுக்கப்பட்ட தாழிகள் குறித்த வரைபட தயாரிப்பு பணி நடந்து வருகிறது. தாழிகளுக்கு இடையே உள்ள தூரம், அருகில் உள்ள பொருட்கள். தாழிகளின் அளவு, உள்ளிட்ட அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. இப்பணிகள் இன்னும் 3 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. அதன்பின் தாழிகளின் உள்ளே உள்ள பொருட்கள் மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவின் உதவியுடன் வெளியே எடுத்து டி.என்.ஏ., பரிசோதனைக்காத அனுப்பபடும்.