அன்னூர்: அன்னூர், பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர மகோட்சவ விழா நடந்தது. அன்னூரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதர கரி வரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர மகோத்சவத் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மகா சுதர்சனம் ஹோமம் துவங்கி 6:30 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இதை அடுத்து சாற்று முறை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.