காக்கிநாடாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஷோபா யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2022 08:07
காக்கிநாடா : காக்கிநாடாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஷோபா யாத்திரை மேற்க்ககொண்டுள்ளார்.
சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானத்தை முன்னிட்டு காக்கிநாடா பகுதிக்கு வந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பிரம்மஸ்ரீ சாகந்தி கோடேஸ்வர ராவ் தலைமையில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
காக்கிநாடா ஏடிபி சாலையில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதி லட்சுமி கோசாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஷோபா யாத்திரை தொடங்கியது. வெள்ளைக்குதிரைகள் நிறைந்த தேரில் சுவாமி தரிசனம் செய்தார். பிரம்மஸ்ரீ சாகந்தி கோட்டேஸ்வர ராவ், ஸ்ரீ வரபிரசாத் ரெட்டி, திம்மாபுரம் கிராமத் தலைவர் ஸ்ரீ பெஜவாடா சத்தியநாராயணா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். கரகங்கள், பஜனைக் குழுக்கள், கோலாட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஷோபா யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, கோசாலையில் சுவாமியை கோசாலை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பிரம்மஸ்ரீ சாகந்தி கோட்டேஸ்வர ராவ் வரவேற்றார். பின் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் அருளாசி பெற்றுச்சென்றனர்.