தானியங்கள் நிரம்பிய அறையில் சுண்டெலி ஒன்று உள்ளே சென்றது. இதை அறியாத ஒருவர் அறையை பூட்டிவிட்டார். சுண்டெலியோ மகிழ்ச்சியில் துள்ளி விளையாடியது. ‘இனி தான் எங்கும் உணவை தேடி அலைய வேண்டியதில்லை’ என்ற மிதப்பில் இருந்தது. நாட்கள் சென்றன. தானியமும் குறைந்தது. தான் வசமாக மாட்டிக்கொண்டதை அப்போதுதான் உணர்ந்தது சுண்டெலி. இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். உழைக்கமால் சாப்பிட்டால் நமது வாழ்வையே இழக்க நேரிடும். சிலருக்கு இது புரிவதில்லை. கடுமையாக உழையுங்கள். உழைப்பவர் ஒருபோதும் தோற்க மாட்டார்.