நோயினால் உடல் சிரமப்படும். அதுபோல் மனதையும் சிரமப்படுத்தும் நோய் ஒன்று உள்ளது. அதுதான் பொறாமை. இதற்கு மனதை ஊனமாக்குகிற சக்தி உள்ளது. ஒருவருக்கு பொறாமை தோன்றுவதற்கு அடிப்படை காரணம் தன்னைப்பற்றி அறியாமல் இருப்பதே. தன்னிடம் உள்ள குறை, நிறைகளை ஒருவர் அறிந்தாலே போதும். பொறாமை என்னும் தீ அணைந்துவிடும். இப்படி இருப்பவர் முகப்பொலிவுடன், கவலையின்றி இருப்பர். மகிழ்ச்சியாக வாழலாம்.