பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
11:07
கோயில்களில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை நடைபெறுவதை பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்ன?
* மும்மூர்த்திகளின் உறைவிடம் வில்வம். மூன்று இலைகளை கொண்ட வில்வத்தில் நடு இலை சிவபெருமானையும், இடது இலை பிரம்மாவையும், வலது இலை பெருமாளையும் குறிக்கும்.
* இதை பூஜைக்கு ஒருமுறை பயன்படுத்தி இருந்தாலும், தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
* கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்களில் இதை அழைப்பர்.
* இதன் இலை, பூ, காய், பழம், வேர், பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.
* சிவபெருமானுக்கு ஞாயிறு அன்று வில்வ அர்ச்சனை செய்வது விசேஷம்.
* வீட்டில் வில்வமரம் இருந்தால் ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலன் உண்டு. அது மட்டும் இல்லை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். ஆனால் மரத்தை பக்தி சிரத்தையோடு வளர்க்க வேண்டும்.
* வில்வ இலையால் சிவபெருமனை பூஜிப்பவர்கள் வெற்றி பெறுவர்.