முருகப்பெருமான் என்றதும் நினைவிற்கு வருவது கந்தசஷ்டி கவசம். இது எல்லோரது உள்ளத்திலும் நிறைந்துள்ளது. கவசம் என்றால் காக்கக்கூடியது என்று பொருள். நம்மை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுகிறது கந்தசஷ்டி கவசம். இதை அருளியவர் பாலன் தேவராய சுவாமிகள். இவர் இக்கவசத்தை அரங்கேற்றம் செய்த தலம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையாகும். ‘சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக’ என்ற வரி இக்கவசத்தில் வரும். ‘சிரகிரி’ என்பது சென்னிமலையைக் குறிக்கும். தினமும் கந்தசஷ்டி கவசத்தை படிப்பவர், கேட்பவரது வேதனைகள் விலகிவிடும்.