* கடவுளை அறிவதே கல்வியின் நோக்கம். * எது உண்மை, எது உண்மையற்றது என்ற ஆராய்ச்சி வேண்டாம். * எல்லோரது வீட்டிலும் பகவத்கீதை புத்தகம் இருக்க வேண்டும். இது பல சாஸ்திரங்களை கொண்டது. * கடவுளின் நாமம் விதை போன்றது. அதன் சக்தி மகத்தானது. * எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன. * உனது எண்ணத்தை பொறுத்தே கடவுள் உனக்கு அருள்பாலிப்பார். * ஆசை உள்ளவனுக்கு ஞானம் வராது. * நல்லவர்களுடன் பழகினால் மனம் துாய்மையாகும். * கடவுளை அடைவதற்கான வழி பக்தியும், ஞானமும். * ஞானிக்கு ஒளிமயமாகவும், பக்தனுக்கு அன்புமயமாகவும் கடவுள் காட்சி தருவார். * எதிலும் பற்று வைக்காமல் கடமையை செய். * வேண்டியவர், வேண்டாதவர் என கடவுளுக்கு யாரும் இல்லை. * விடாமுயற்சி உள்ளவனுக்கு எல்லாம் சாத்தியம். * ஏழைக்கும் ஏழையாக இருக்க பழகு. * தீமைக்குப் பதிலாக தீமை செய்யக்கூடாது. * பொய் இருக்குமிடத்தில் தீமைகள் இருக்கும்.