சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் – காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது வைரவன்பட்டி. இத்தலத்தில் வடிவுடை அம்பாள் சமேத வளர் ஒளிநாதராக சிவன் அருள் பாலிக்கிறார். தல விருட்சம் அழிஞ்சில் மரம் (ஏறழிஞ்சில்), இங்கு வைரவர் தீர்த்தம் உள்ளது. இக் கோயிலில் பல சன்னதிகள் இருந்தாலும் சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. சொர்ணம் என்றால் தங்கம், ஆகர்ஷணம் என்றால் ஈர்ப்பு. இவரை வழிபடுபவர்களுக்கு தங்கத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும் என்பதால் இங்குள்ள பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர் என அழைக்கின்றனர்.