Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதாள அறையில் இருந்து மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்!; வரும் மார்ச் 1 முதல் 10ம் தேதி வரை தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
பாதாள அறையில் இருந்து மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்!; வரும் மார்ச் 1 முதல் 10ம் தேதி வரை தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
05:02

தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், முதல் 24 நாட்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் தரிசனம் தருகிறார்.


இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவிலிலும் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு நடக்கிறது. பிரம்மன் கோவில் தெரு பகுதியில் இந்த கோவில்கள் கடந்த 1739ம் ஆண்டு  கட்டப்பட்டது. சுமார் 180 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளுகின்றனர்.  இந்த கோவில் உள்ள அத்திவரதை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ம் ஆண்டு அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு  வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்  10ம் தேதி( செவ்வாய்க்கிழமை) வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த அத்திவரதர் சுமார் ஒன்றரை அடி உயரம் வரை அத்திமரத்தால் செய்யப்ப்டுள்ளது. விழா நாட்களில் தைலகாப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்கிறது. தினமும் காலை 8 மணி முதல்  மதியம் 12 மணி வரையும், மாலை  5மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தாிசனம் செய்ய உகுந்த நேரம் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar