Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு பெரியபட்டினத்தில் பவுர்ணமி விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழா: பரமதத்தார் கப்பல் ஏறிப்பாண்டிய நாட்டிற்கு செல்லும் நிகழ்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
03:07

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பரமதத்தர் கப்பல் ஏறிப் பாண்டிய நாட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.12ம் தேதி பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் வருதல் பின் பரமதத்த செட்டியார்.புனிதவதியார் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடந்தது.மாலை ஸ்ரீபிஷாடனர் வெள்ளைசாற்றி புறப்பாடு.இரவு,பரமதத்த செட்டியார் புனிதவதியார் வீதியுலா,கடந்த 13ம் தேதி பிஷாடனமூர்த்தி பஞ்சமூர்த்திகம் மஹா அபிலேஷகம் நடந்தது. நேற்று முன்தினம் பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடனும் வாத்தியங்கள் முழங்கவும் திருவீதியுலா வருதல் அப்போது பக்தர்கள் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை புனிதவதியார் எதிர் சென்று அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படையல் நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இரவு பரமதத்தர் மனைவி புனிதவதியிடம் மற்றொருக்கனியைக் கேட்க மாங்கனியை வரவழைத்துக் கொடுத்த அவரது அற்புதக்காட்சியை கண்டு அதிர்ந்த பரமத்தர் கப்பல் ஏறி பாண்டிய நாடாகிய சித்திவிநாயகர் ஆலயத்துக்கு செல்லுதல்.பின் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோவிலில் பரமதத்த செட்டியாருக்கு இரண்டாவது திருமணம் நிகழ்ச்சி நடந்தது.பின் புனிதவதியார் புஷ்பபல்லாக்கி பாண்டிய நாட்டுக்கு செல்லும் காட்சி நடந்தது. நேற்று அதிகாலை 3மணிக்கு பரமதத்த செட்டியார் இரண்டாவது மனைவியும் மகளும் எதிர்சென்று புனிதவதியாரை வலம்வந்து வணங்குதல் பின் இல்லறம் துறந்த புனிதவதியார் பெருமை சேர்பேய் வடிவத்தை ஈசனிடம் வேண்டி புனிதவதியார் திருக்கயிலையத்துக்கு தலையால் கடந்து செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனைத்து மின்விளக்குகள் நிறுத்தப்பட்டது.பின் சிவதரிசனம் பயனைத்தந்தருளும் பஞ்சமூர்த்திகளும் கயிலாசவாகனரூடராய் எழுந்தருளி அம்மையாருக்கு காட்சி கொடுத்து திருவீதியுலா நடந்தது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் முகம்மது மன்சூர், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,அறங்காவலர் குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம், துணைத்தலைவர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar