திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட மயில் வாகனத்தை காணிக்கையாக வழங்கினார்.காஞ்சிபுரம் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தில், திருத்தணியில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளாக உள்ளனர்.நேற்று, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூலாம் பூசப்பட்ட மயில் வாகனத்தை, கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.
இது குறித்து தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தினர் கூறியதாவது:இந்த தங்க மயில் வாகனம், புதிய பர்மா தேக்கு கட்டையால் உருவாக்கப்பட்டது. பின், 50 கிலோ எடை கொண்ட செப்புத்தகடு மயில் வாகனத்திற்கு பொருத்தப்பட்டு, அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது தங்க மயில் வாகனத்தில் உற்சவர் உலா வருவதற்கு காணிக்கையாக கொடுத்து உள்ளோம்.எங்கள் சங்கத்தின் சார்பில், 365 நாட்களும் உச்சிகால அபிஷேகம் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.