ஆடி முதல் செவ்வாய் அவ்வையார் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2022 08:07
நாகர்கோவில்: ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் தினமான இன்று அவ்வையார் அம்மன் கோயிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே தாழக்குடியில் தமிழ் புலவர் அவ்வையாருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர். கொழுக்கட்டை, பாயாசம் போன்றவை சமைத்த பின்னர் பின்னர் அதை அவ்வையாருக்கு படைத்து சாமி கும்பிட்டு திரும்புகின்றனர். குழந்தை வரம் வேண்டியும், குடும்ப ஐஸ்வரியத்துக்காகவும் பக்தர்களின் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இன்று முதல் செவ்வாய் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வருவதை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நெரிசல் ஏற்படதாமல் தடுக்க மூங்கில் கம்புகளால் தடுப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் பின்புறம் பெண்கள் கொழுக்கட்டை செய்யும் இடத்தில் அடுப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மார்கத்தில் வருபவர்கள் ஆரல்வாய்மொழியில் இருந்து தாழக்குடி வரமுடியும்.