பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
11:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஆக., 3 அன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இக்கோயிலில் ஆக., 2 அன்று இரவு 7:00 மணிக்கு மேல் அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் உலா துங்குகிறது. ஆக., 3 அன்று காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படும். அன்று மாலை பெருமாள் அன்ன வாகனத்தில் மோகினி அவதாரம் எடுத்து வீதி வலம் வருகிறார். தொடர்ந்து தினமும் காலை, மாலை சிம்ம, சேஷ, கருட, ஹனுமன் வாகனங்களில் பெருமாள் வலம் வருவார். ஆக., 8 அன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி, ஆண்டாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அன்று திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்துவர். மறுநாள் பூ பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள், ஆக., 10 அன்று காலை நவநீத கண்ணன் திருக்கோலம், இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருகிறார். ஆக., 11 காலை 9:30 மணிக்கு மேல் பெருமாள் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார். மறுநாள் காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி துடுகுச்சிநாகநாதன், டிரஷரர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் செய்து வருகின்றனர்.