பதிவு செய்த நாள்
19
ஜூலை
2022
11:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி 7ல் கார்த்திகை, ஆடி 12ல் அமாவாசை, ஆடி 15ல் ஆடிப்பூரம், ஆடி 26ல் பவுர்ணமி, ஆடி 27ல் 1008 விளக்கு பூஜை நடக்கிறது.
சித்தி விநாயகர் கோயிலில் ஆடி 18ல் மூலவர்கள் விநாயகர், மீனாட்சி அம்மன், காசி விஸ்வநாதர், ஸ்ரீதேவி,பூதேவி சமேத சீனிவாச பெருமாள், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், குருவாயூரப்பன், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடக்கிறது. திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி 14ல் ஆண்டாள் ஏகாந்த சேவை, ஆடி 15ல் ரங்க மன்னார் பெருமாள் சேவை, ஆடி 16ல் ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம், ஆடி 18ல் கருப்பசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், ஆடி 20ல் தாயாருக்கு நவ கலச ஸ்தாபன திருமஞ்சனம், ஆடி 26ல் ஆவணி அவிட்டம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆடி 16ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் பூஜைகள் நடக்கிறது.
எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கிழமைகளில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், ஆடி 6ல் விளக்கு பூஜை, ஆடி 20ல் மூலவருக்கு வளையல் அலங்காரம், பூஜை முடிந்து பெண் பக்தர்களுக்கு வளையல்கள், ஜாக்கெட் துணி, திருமாங்கல்ய கயிறு, மஞ்சள் கிழங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பாண்டியன் கல்யாண விநாயகர் கோவிலில் ஆடி 18ல் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை அலங்காரம் நடக்கிறது. திருநகர் அய்யனார் அச்சமுத்தமன் கோயிலில் ஆடி 6ல் கட்டுதல், ஆடி13ல் அக்னி சட்டி எடுத்தல், ஆடி 20ல் பால்குட உற்ஸவம், ஆடி 27ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு விளக்கு எடுத்தல் திருவிழாக்கள் நடக்கிறது.