பதிவு செய்த நாள்
21
ஜூலை
2022
10:07
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் - ந்தவாசி சாலை, ருநகர், நடுத் தெருவில், மாரியம்மன் கோவில் உள்ளது. ழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா, கடந்த, 14ல் துவங்கியது. முதல் நாள் உற்சவமான அன்று, காலை 10:00 மணிக்கு செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும், சிலம்பு நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான கடந்த, 17ல், காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை மற்றும் சுற்றுப்புறத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு அலையாற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான கடந்த, 18ல், காலை 10:00 மணிக்கு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காப்பு ட்டுதல், அலங்காரம், ஆராதனையும் நடந்தது. காலை 8:00 மணிக்கு அம்மன் குடம் ஊர்வலமும், கூழ் சேகரித்தல் நிகழ்வும் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு ரசுராமர் சிலை மறறும் குடம் ஊர்வலம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டது. இரவு 10:00 மணிக்கு, சிரவஞ்சிபட்டு, ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், ‘பாதாள அரக்கன்’ என்ற தலைப்பில் நாடகம் நடந்தது. விழாவில், பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.