அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணப்பட்டது.
அவிநாசியில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமானதும், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதுமாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்நிலையில், கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த, ஏப்ரல் மாதம் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணிக்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில், கண்காணிப்பாளராக வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், கலந்துகொண்டார். மேலும், அவிநாசி கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி, தக்கார். கோவில் சரக ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இதில், ரூ 13 லட்சத்து 50 ஆயிரத்து 855 ரூபாய் இருந்தது. மேலும், தங்கமாக 112கி, வெள்ளி 99கி, 7 அமெரிக்கா டாலர் உள்ளிட்டவைகள் காணிக்கைகளாக இருந்தது.