கம்பம்: ஆடி.வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானம், கூல் காய்ச்சி ஊற்றுவது போன்றவைகளும் நடத்தப்படும். நேற்று முதல் வெள்ளிக் கிழமை என்பதால் உத்தமபாளையம். ஞானம்மன் கோயில், துர்க்கையம்மன் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், கம்பம் கவுமாரியம்மன் கோயில், சாமான்டிபுரம் சாமாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அனைத்து கோயில்களிலும் அம்மன் முழு அலங்காரத்தில் இருந்தார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அன்னதானம், கூல் ஊற்றுதல் போன்றவைகள் நடைபெற்றன. ஒவ்வொரு கோயிலிலும் திரளான பெண் பக்தர்கள் காணப்பட்டனர்.