காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2022 06:07
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான மலை மீதுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கிருத்திகை பிரம்மோற்சவத்தில் இன்று 22.7.2022 பரணி நட்சத்திரத்திரம் என்பதால் பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் "பூ" காவடி சுமந்துக் கொண்டு "அரோகரா அரோகரா"என்ற நாமங்கள் முழுக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி கொண்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு மேற்பார்வையிட்டதோடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ள தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார். ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு பேசுகையில் ஆடிக் கிருத்திகை பிரம்மோற்சவத்தில் 22 ஆம் தேதி பரணி 23ஆம் தேதி ஆடி கிருத்திகை 24-ஆம் தேதி தெப்போற்சவம் 25ஆம் தேதி சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் விக்ஞானகிரி மலை அருகில் நடத்தப்படும் என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாண்டு பக்தர்களை அனுமதித்ததால் ஸ்ரீ காளஹஸ்தி நகரின் மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை 23.7.2022 ஆடிக்கிருத்திகை அன்று சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதற்கு தகுந்தார் போல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தெரிவித்தார். பக்தர்கள் நெரிசலை கவனத்தில் கொண்டு தள்ளுமுள்ளு ஏற்படாமல் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு வரிசைகளை ஏற்பாடு செய்ததோடு (விக்ஞான மலைமீதுள்ள) பக்தர்கள் கோயிலுக்கு வர ஸ்ரீ காளஹஸ்தி அரசு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு வழியிலும் வழக்கம் போல் பக்தர்கள் வரும் மற்றொரு ( பழைய)வழியை இரண்டு வழிகள் மூலம் விக்ஞான மலை மீது பக்தர்கள் வர தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விஞ்ஞான மலை முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்திருப்பது பக்தர்களின் கண் கவறும் வகையில் உள்ளது .இதே போல் வரும் 24ஆம் தேதி கோயில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம் நடக்க உள்ளதால் அதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளான குளத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தப்படுத்தப் பட்டும் குளத்தில் நீரை நிரப்பி, பொறியியல் துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தார். ஆடிக்கிருத்திகை அன்று (கல்யாண கட்டா) முடி காணிக்கை கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார் .(புஷ்கரணியில்) குளத்தில் பக்தர்கள் புனித நீராடல் செய்வதற்கு சாதகமாக தண்ணீர் குழாய்களை ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.