நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2022 06:07
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலின் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி குழந்தை பேரு வேண்டுவோர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், குழந்தையை இன்றளவும் கோயிலில் விட்டு ஏலம் எடுக்கும் முறை உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாகநாத சுவாமி கோயிலில் அருள் பாலிக்கும் சவுந்தர்ய நாயகி அம்பாளுக்கு, ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். ஜூலை 31 அம்பாள் தேரோட்டம், ஆகஸ்ட் 3 அன்று நாகநாதசுவாமி சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.