ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2022 08:07
ஸ்ரீகாளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் குடிவாட. அமர்நாத் குடும்பத்தாரோடு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு கோயில் சார்பில் பூர்ண கும்ப வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் தீர்த்த பிரசாதனங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். சாமி தரிசனத்திற்கு பின்னர் குடிவாட. அமர்நாத் பேசுதையில் இங்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தது மிகவும் மன அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுத்ததாகவும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு கடவுளின் ஆசீர்வதத்தினால் மாநிலத்திற்கு மேலும் பல தொழிற்சாலைகள் வர உள்ளதாகவும் தற்போது மாநில தொழில்துறையின் வளர்ச்சி முன்னோக்கிச் செல்வதாக தெரிவித்தார் .இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு .தாரக சீனிவாசுலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அதிகாரிகள் அறங்காவலர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.