ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவை பிரம்மோற்ஸவம் என்பர். கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவில் சுவாமியும், அம்மனும் வாகனங்களில் எழுந்தருள்வர். கோயில்களில் அன்றாடம் ஒருகாலம் முதல் ஆறுகாலம் வரை பூஜை நடத்தப்படுகிறது. இதில் மந்திரம், மேளதாளம், நைவேத்யம் முறையாக செய்ய வேண்டும் என்பது விதி. ஏதாவது குறைஇருக்குமானால், அதை நிவர்த்தி செய்யவே ஆண்டுக்கொருமுறை திருவிழா நடத்துவதாக ஆகமங்கள் கூறுகின்றன. திருவிழாவிலும் குறை நேர்ந்து விட்டால் அதை 12 ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேக விழாவில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று ஆகமம் கூறுகிறது.