பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
10:07
விருத்தாசலம், : விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 40வது ஆண்டு ஆடி செடல் திருவிழா நேற்று துவங்கியது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியுடன், கோவிலில் கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணியளவில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். வரும் 29ம் தேதி, 500க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை, ஆகஸ்டு 5ம் தேதி மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, செடல் அணிந்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.