பரங்கிப்பேட்டை: பி.முட்லூரில் 127 அடி உயரம் ஆஞ்சநேயர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின்ரோடு எம்.ஜி.ஆர்., சிலை அருகில் ராம அனுமன் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் தவத்திரு ஓங்கார நந்தா சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் நடந்த பூமி பூஜைக்கு அறக்கட்டளை தலைமை அறங்காவலர் சீனு தலைமை தாங்கினார். பூமி பூஜையை சிதம்பரம் ரங்காச்சியார் சுவாமிகள் செய்தார். இதனையொட்டி தச அவதாரம் மகா வேள்வி, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.விழாவில் பு.முட்லூரை சுற்றியுள்ள கிராம முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.