தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா கீழ உச்சாணி புனித அன்னாள் சுவக்கின் ஆலய நவநாள் திருவிழா கடந்த 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நவநாள் சிறப்பு திருப்பலி மறையுரைகள் நடந்தன. பங்கு பாதிரியார் அமலதாஸ், பாலா, தாமஸ் ஆல்வா எடிசன் திருவிழா நிறைவு திருப்பலி நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து புனித அன்னாள் சுவக்கின் மாதா சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். வலங்கையர் இளையோர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.