பதிவு செய்த நாள்
30
ஜூலை
2022
01:07
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.கோவிலில், கடந்த 22ல் ஆடிப்பூர உற்சவம் துவங்கி, உற்சவ அம்பாளிற்கு, அபிஷேகம், அலங்கார வழிபாடு, தினமும் நடக்கிறது.கடந்த 25ல், அம்பாள், அதிகார நந்தி வாகனத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்றை வலம் வந்தார். நேற்று, சிறப்பு அலங்காரத்தில், தேரில் வீதியுலா சென்றார்.காலை 7:00 மணிக்கு, தேரின் வடம்பிடித்து இழுத்து, முக்கிய வீதிகள் வழியே சுவாமியை அழைத்து சென்றனர். காலை 9:00 மணிக்கு நிலையை அடைந்தது.உத்திர நட்சத்திர நாளான ஆக., 2ல், மூலவ அம்பாளிற்கு, முழு அபிஷேகம், அலங்கார வழிபாடு, திருக்கல்யாணம் என நடைபெறுகிறது.