கம்பம் கோயில்களில் ஆடிப்பூரம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2022 10:08
கம்பம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கம்பம் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயில் உள்ள ஆண்டாள் கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அலங்கார திருமஞ்சனமும், தொடர்ந்து புஸ்பாஞ்சாலியும் நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்ட கூடைகளில் பூக்களை கொண்டு வந்து அம்மன் மீது சொரிந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் ஒம் நமோ நாராயணாபக்த சபை தலைவர் ஹரஹர அய்யப்பன், ரவி, கட்டளைதாரர் பழனிவேல்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் விசேவ அலங்காரத்தில் இருந்தார். நேற்று காலை நூற்றுக்கணக்கான பெண்கள் கஞ்சிப் பானையுடன் ஊர்வலமாக வந்து கூல் காய்ச்சி வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் யதுகுல வள்ளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் அம்மனை தரிசித்தனர்.