கொடைக்கானல், கொடைக்கானல் சலேத் மாதா கோயில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது 156 வது ஆண்டு திருவிழா திருப்பலி நிகழ்வுக்கு பின் கொடியேற்றம் நடந்தது. கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டனர். விழாவில் வான வேடிக்கைகள் நடந்தன. கொடைக்கானலில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டனர். வரும் ஆக. 14ஆம் தேதி ஆண்டு பெருவிழா நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்ட வட்டார அதிபர் ஆனந்தம், பங்குச் சந்தை ஜான் திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் சலேத் மாதா சப்ர பவனி நடக்கவுள்ளது குறிப்பிடதக்கது.