* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது சிறப்பு. * கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலில் மூலவராக இருக்கும் கல்கருடனே வீதியிலும் உலா வருகிறார். * கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கரத்துடன் கருடாழ்வாரை தரிசிக்கலாம். * நாகபட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் கருடன் காட்சி தருகிறார். * சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் மூலைக்கருடனுக்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்தால் தடைகள் விலகும். * விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ரங்கமன்னார், ஆண்டாளுடன் கருடாழ்வாரும் கருவறையில் இருக்கிறார். இத்தலத்தில் ரங்கமன்னாரின் மாமனாராக இருப்பவர் கருடனே. * விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடனை தரிசிக்கலாம்.
* திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் கருடனும், கொடிமரமும் நம்பாடுவான் என்னும் பக்தருக்காக சற்று விலகி நின்ற நிலையில் உள்ளனர்.
* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளன்று நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள் (ஒன்பது பெருமாள்கள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருள்வர். * திருப்பதி மலையிலுள்ள சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே. * திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் இருக்கிறார். * கர்நாடகாவிலுள்ள மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் பங்குனி ஏகாதசியன்று வைரமுடி சேவை நடக்கிறது. இந்த வைரமுடியை(கிரீடம்) வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.