கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2022 01:08
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தீ மதி திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. கடும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ளது சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீ மாரியம்மன் கோயில். பிரிசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாத உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவம் கடந்த மாதம் 22-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து ஜூலை 31 ல் தேர் திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து முக்கிய வீழாவான செடல் மற்றும் தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5 மணி முதல் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தல், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவை செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து 9 மணிக்கு மேல் தீ மிதிக்கும் பக்தர்கள் காட்டி கொண்டனர். பின்னர் 10 மணிக்கு சோதனை கரகம், அலகு தரிசனம், பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்வும் நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று விடையாற்றி உற்சவமும், நாளை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.