பதிவு செய்த நாள்
03
ஆக
2022
11:08
ராஜபாளையம்: கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் ஆவணியில் நெல் அறுவடை சீசன் துவங்குவதற்கு முன்பாக ஆடியில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, கடவுளுக்கு படைக்கும் விழாவை, நிறை புத்தரிசி பூஜையாக நடத்தி வருகின்றனர் மலையாளிகள்.
இந்த நாளில் வயலில் விளைந்த நெற்கதிர்களை முதலாவதாக அறுவடை செய்து கடவுள் முன் த்து பூஜித்து, பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படுகிறது. நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு கேரளாவில் சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, பந்தளம், குருவாயூர் உட்பட அனைத்து கோயில்களிலும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ராஜபாளையத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சங்கம், ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் நெற்கதிர்களை கேரளாவில் உள்ள கோயில்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்தாண்டு, நாளை (4ம் தி) நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. இந்த விழாவுக்காக ஐயப்பனின் படை வீடுகளான அச்சன்கோவில், ஆரியங்காவு குளத்துப்புழா, பந்தளம்கோயில்களில் நெற்கதிர்கள் வழங்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.