அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 08:08
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று(ஆக.4) கொடியேற்றத்துடன் துவங்கியது.சுவாமி சுந்தரராஜ பெருமாள், அம்பாள் ஸ்ரீதேவி, -பூமிதேவியுடன் உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு அபிேஷகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. வேத, மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் மாலை சுவாமி அன்னம், சிம்மம், அனுமார், கருட, யானை, குதிரை வாகனங்களில் வீதிஉலா வருவர். ஆக.,12 தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருள்செல்வன் செய்து வருகின்றனர்.