பக்தர்களை முகம் சுளிக்க வைக்கும் கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 03:08
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தெப்பக்குளம் போதிய பராமரிப்பின்றி கழிவுநீர் குளம் போல காட்சியளிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரைக்குடியை காக்கும் தெய்வமாக கொப்புடைய நாயகி அம்மனை பலரும் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரை வைகாசி திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இங்குள்ள தெப்பக்குளம் போதிய பராமரிப்பின்றி கிடப்பதால் பக்தர்கள் முகம் சுளித்து வருகின்றனர். தெப்பக்குளத்தை சுற்றிலும் கழிவுகளை கொட்டுவதோடு தெப்பக்குளத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தெப்பத் திருவிழா மற்றும் ஆடிப்பெருக்கு நாளில் ஏராளமான பெண்கள் தெப்பத்தில் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் தெப்பத்தின் படிக்கட்டுகள் நாறிக்கிடப்பதோடு வெப்பம் முழுவதும் குப்பைகள் மது பாட்டில்கள் மிதப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே ரெப்பத்தை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.