உயர்தரமான ஆடையணிந்தவரை பார்த்த தோழர் ஒருவர் நாயகத்திடம் ‘‘இவர் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர், இவர் என்ன சொன்னாலும் நடக்கிறது’’ என்றார். பிறகு, எளிய ஆடை அணிந்த மற்றொருவர் சென்றார். அவரை பார்த்த தோழர் எதுவும் பேசவில்லை. ‘‘இவர் உமக்கு தெரியவில்லையா, புறத்தோற்றத்தை வைத்து யாருடைய தன்மையையும் தீர்மானிக்காதீர் உயர்ந்த பண்புகளான அன்பு, ஒழுக்கம், பணிவு, யாரிடம் உள்ளதோ அவரே மேலானவர்’’ எனத் தோழரிடம் தெரிவித்தார்.