குருவும், வாயுவும் கிருஷ்ணரை வழிபட்ட தலம் குருவாயூர் உன்னி கிருஷ்ணன் (பாலகிருஷ்ணன்) கோயில். இங்குள்ள முன்மண்டபத்தில், தினமும் இரவு ஒன்பது மணிக்கு, கிருஷ்ணாட்டம் என்னும் நாட்டிய நாடகம் நடக்கும். அதன்பின்னரே நடை சாத்தப்படும். அதிகாலையில் முதல் தரிசனமாக குருவாயூரப்பன் விஸ்வரூபத்தில் காட்சியளிப்பார். அப்போது, நல்லெண்ணெய் அபிஷேகம், வாகை மரப்பட்டையை அரைத்துப் பூசும் வாகை சாத்துப்படி, சந்தன அபிஷேகம் நடக்கும். அலங்காரத்திற்குப் பின் நெல்பொரி, நாட்டுச்சர்க்கரை, கதலி வாழை நைவேத்யம் செய்வர். இங்கு குழந் தைகளுக்கு முதல் சோறுõட்டுவதும், எடைக்கு எடை துலாபாரம் செலுத்துவதும் முக்கிய நேர்த்திக்கடன்கள்.