திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் குரு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 10:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் குருபூஜை நடந்தது.
குன்றக்குடி சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு நடராஜர் சன்னதி முன்பாக யாகசாலை பூஜைகள் துவங்கின. ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில், ஆ.பி.சி.அ. கல்வியியல் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் முன்னிலையில் துவங்கியது. யாகசாலை பூஜைகளை ரமேஷ் குருக்கள் தலைமையில் கணேச குருக்கள், வைரவன் குருக்கள், ராமு குருக்கள் ஆகிய சிவாச்சார்யர்கள் நடத்தினர். பூர்ணாகுதி தீபாராதனையை திரளாக பக்தர்கள் தரிசித்தனர்.பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி 63 நாயன்மார்களுக்கும், உற்ஸவ நால்வருக்கும் அபிஷேகம் நடந்து, சிறப்புத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்தர், அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பிரகார வலம் வந்தனர்.