கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நாளை 65 வது சுதந்திர தினத்தினையொட்டி பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சுதந்திரதினத்தையொட்டி நாளை பகல் 12 மணிக்கு ஆதிகும்பேஸ்வரசுவாமிக்கும், மங்களாம்பிகைக்கும் சிறப்பு வழிபாடும், அதனை தொடர்ந்து சாதி, மத, பேதமற்ற பொது விருந்தும் நடைபெறவுள்ளது. இதில் அரசுத்துறை உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், முக்கி விருந்தினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.