அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., அருள்வலம் வந்த கருப்பு சாமியாடி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 11:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கருப்பர் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடி 8 கி.மீ., தூரம் அருள்வலம் வந்தார்.
சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித்திருவிழா ஆக.10ல் நடந்தது. இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக புறப்பட்டனர். 6 அடி நீளமுள்ள 2 கூர்மையான அரிவாள்கள் மீது கருப்பர் சாமியாடி ஏறிநின்று அருள்வலம் வந்தார். 8 கி.மீ., தூரம் கடந்து வந்து சிங்கம்புணரி நாவிதர் ஊரணியில் கரகம் எடுப்பு நடந்தது. அங்கிருந்து இரவு 9:00 மணிக்கு கோயில் வந்தடைந்தனர். இரவு 10:00 மணிக்கு கிடாவெட்டி கருப்புசாமிக்கு படையல் போடப்பட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.