பதிவு செய்த நாள்
12
ஆக
2022
03:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான, சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், 16 வகையான காய்கறிகளை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு ராகி கஞ்சி வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவிலிலும், அம்மன் காய்கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் இனிப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், கதவுகரை பகவதி அம்மன் கோவில் என அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களிலும், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதியிலும், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.