சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு காளியம்மன் கோயில் 64 ம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் விழா நடந்தது. காலை 5:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்து, கூல் வழங்கப்பட்டது. மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வீதி உலா வந்தனர். இரவு பெண்கள் மாவிளக்கு ஏற்றிய பின்ன விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், அன்னை காளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.