அவிநாசி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு. பூணூல் மாற்றும் வைபவம் குரு க்ருபா சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. பௌர்ணமியும் ஆவணி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாளே ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவிநாசி மங்கலம் ரோட்டில் குரு க்ருபா சேவா அறக்கட்டளை சார்பில், சுப்பையா சுவாமி மடத்தில் பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதனையடுத்து, ஆனந்த ராம சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் ரிஷி தர்ப்பணம், மூதாதையர் தர்ப்பணம் மற்றும் வேதாரம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் 200ம் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றும் வைபவத்தில் பங்கேற்றனர்.