வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதி முனியாண்டி கோயில் ஆடி உற்ஸவ திருவிழா 2 நாட்கள் நடந்தது. நேற்றுமுன்தினம் பால் குடங்களுடன் ஊர்வலமான வந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் சுவாமி ரத ஊர்வலம் தேரடி வீதிகள் வழியே வலம் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்து 25 ஆட்டு| கிடாய்களை வெட்டி பொது விருந்து வழங்கப்பட்டது.
* அய்யலூர் அருகே ரோட்டுபுதூர் விலங்கு கருப்பணசுவாமி கோயிலில் 3 நாட்கள் ஆடி உற்ஸவ திருவிழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் எடுத்தல், பொங்கல் அழைப்பு 121 ஆட்டு கிடாக்கள் வெட்டி பொது விருந்து வழங்குதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை சுக்காம்பட்டி, அய்யலூர், சித்துவார்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.