மேலூர்: மேலுரில் நாகம்மாள் கோயிலின் 58 ம் ஆண்டு ஆடி திருவிழா இன்று துவங்குகிறது. நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆக.16 ல் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைவார்கள். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மின் மோட்டார் மூலம் நாகம்மாளுக்கு பாலாபிசேஷகம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். ஆக 17 முளைப்பாரி மற்றும் தேர் ஊர்வலமும், ஆக 18 ல் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.