சின்னமனுாரில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2022 03:08
சின்னமனுார்: சின்னமனுாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்கு 151 விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
விநாயகர் சதுர்த்தி ஆக. 31 ல் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட வலியுறுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊரிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது சின்னமனுாரில் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்கென 151 சிலைகள் தயார் நிலையில உள்ளன. தற்போது வர்ணம் தீட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், நகர் தலைவர் பாண்டி உள்ளிட்ட பலர் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.