* உணவானது உடலில் மட்டுமே பாயும். ஆனால் நமது எண்ணமானது எங்கும் பாயும். * அறிவு காட்டும் பாதையை தேர்ந்தெடுத்தால், வாழ்வில் உயர்வடையலாம். * யார் ஒருவர் எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல் இருக்கிறாரோ, அவர் ஞானியாவார். * எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்று கருது. * மனிதர்கள் மனம் போன பாதையில் செல்ல விரும்புகின்றனர். * அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு. * திறமையின்மை, பயம் என இரண்டுமே கவலையை அதிகரிக்கச் செய்யும். * மனதை அடக்கினால் அது அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும். * ஆசையை ஒழிக்க வேண்டாம். அதை சீர்படுத்து. * பிறரை குத்திக்காட்டுவதுபோல் அறிவுரை கூறாதே. * உலகில் தீர்க்க முடியாத பிரச்னை என ஏதுமில்லை. * ‘வாழ்க வளமுடன்’ என வாழ்த்தினால் உன்னைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். * அனைவரையும் வாழ்த்தப் பழகினால் மனதில் பகைமை உணர்வே வராது. * தவறு செய்பவர்களுக்கு உடனே புத்தி சொல்லாதே.