* நமது பாரதம் தெய்வீகமும், கலாசாரமும் நிறைந்த பசுமையான நாடு. * ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தைக் கடைப்பிடி. இன்பமாக வாழ்வாய். * கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. எல்லாம் நல்லதாக நடக்கும். * ராமபிரான், கிருஷ்ணபிரான் அவதாரம் செய்த பூமியான இந்தப் பாரதம் புண்ணியம் மிக்கது. * புண்ணியத் தலங்களுக்கு சென்றால், நாம் செய்த பாவங்களின் சக்தி குறையும். * நியாயமான வழியில் வாழ்க்கையை நடத்தினால், எல்லா நன்மையும் உண்டாகும். * பசுவிற்கு உணவு கொடு. உனது பாவம் தீரும். * தினமும் தர்மம் செய். உன் சக்திக்கு உட்பட்ட தர்மம் எதுவானாலும் நல்லதே. * தர்மத்தை நீ காத்தால், தர்மம் உன்னை காக்கும். * தினமும் இரண்டு நிமிடமாவது மவுனமாக இரு. * விநாயகரை வணங்கு. முயற்சியில் வெற்றி பெறுவாய். * ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள விஷயங்களுக்கு செலவிடு. * நாம் சாப்பிடும் உணவு துாய்மையாக இருந்தால், மனமும் சுத்தமாக இருக்கும். * நீ செய்த வினைகள் மட்டுமே, உன்னை விட்டுப்பிரியாமல் இருக்கும்.