புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேர் திருவிழாவை கவர்னர் இக்பால் சிங் நாளை 17ம் தேதி வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேர் திருவிழா நாளை 17ம் தேதி நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கவர்னர் இக்பால் சிங் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.பி.,கண்ணன், கலெக்டர் தீபக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கடலூர் மெயின் ரோடு பிரம்மன் சதுக்கம் அருகில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.