ஆழ்வார்குறிச்சி : சிவசைலத்தில் மழைவேண்டி வருண ஜெபம் நடந்தது.சிவசைலத்தில் திருநெல்வேலி ராஜலட்சுமி கார்மென்ட்ஸ் லட்சுமணன் தலைமையில் அத்ரி அடியார் கண்மணி, அரசபத்து கால்வாய் நீர்பாசன சங்க தலைவர் சவுந்தர், செயலாளர் நாராயணன், ஆம்பூர் பணிநிறைவு தலைமையாசிரியர் காசிஅய்யர் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம் நடந்தது.சுத்தமல்லி சீதாராமசர்மா தலைமையில் வைதீகர்கள் கும்ப பூஜை, சிறப்பு ஹோமம், விசேஷ ஜெபம் மற்றும் நதிநீர் பூஜைகளை நடத்தினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் பூஜைகளை கோயில் அர்ச்சகர் நாரம்புநாதபட்டர் மேற்பார்வையில் ராஜாபட்டர் நடத்தினார். வருணஜெப ஏற்பாடுகளை ராஜலட்சுமி கார்மென்ட்ஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.