Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரகாண்டம் பகுதி-6 சுந்தரகாண்டம் பகுதி-8 சுந்தரகாண்டம் பகுதி-8
முதல் பக்கம் » சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் பகுதி-7
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2011
03:01

ஆஞ்சநேயருக்கு பறக்கும் சக்தி இருக்கிறது என்பதில் ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது தெரியுமா? ஒரு பறவை பறக்கிறது என்றால், மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதற்கு ஏதாவது பிடிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்போம். எவ்விதப் பிடிப்பும் இல்லாமல்  தான் அது பறக்கிறது. ஆஞ்சநேயரும் அப்படித்தான். அவர் பற்றற்றவர். தனக்காக ஏதும் வேண்டாதவர். உலகில் யார் யார் சிரமப்படுகிறார்களோ, அவர்களுக்கு பறந்து வந்து உதவுபவர். அதற்காக எந்தக் கூலியையும் எதிர்பாராதவர்.ஆனால், நமக்கெல்லாம் பெரும் பற்று இருக்கிறது. செல்வத்தின் மீதான பற்று அது. பணம் கொடுத்தால் தான் எந்தக் காரியமும் இங்கே நடக்கும். ஆஞ்சநேயரைப் போல் பற்றற்ற வாழ்க்கை மேற் கொள்பவர்களுக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி, பணத்தை தேடி அலையும் போதோ, அந்தப் பணத்தால் கிடைக்கும் சுகத்தாலோ கிடைப்பதில்லை.இப்படி பற்றில்லாமல் பறந்து சென்ற அந்த மாவீரன், இப்போது ஸிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கிக் கொண்டார். அவளுக்கு ஒரு விசேஷ சக்தியுண்டு. யாரையும் அவள் நேரடியாக பிடிக்க வேண்டியதில்லை. ஒரு உயிரின் நிழலைப் பிடித்தாலே போதும். அது அவளிடம் சிக்கி விடும்.ஸிம்ஹிகைக்கு கோரப்பசி. ஒன்றும் அகப்படவில்லையே என நினைத்திருந்தவளின் கையில் ஆஞ்சநேயரின் நிழல் சிக்கியது. மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஆஞ்சநேயரின் ஓட்டம் தடைபட்டுப் போயிற்று. இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, திறந்திருந்த அவளது வாய்க்குள் நுழைந்தார். அவளது உயிர் ஸ்தானம் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்து தன் நகங்களால் கீறினார். அவள் வலியால் துடித்தாள். அவளது உயிர் அடங்குமுன், தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவள் வாயை மூடுவதற்குள் வெளியே வந்துவிட்டார். ஆகாயத்தில் இருந்து அந்த ராட்சஷி கதறியபடியே கடலுக்குள் விழுந்து உயிர்விட்டாள். தொடர்ந்து பறந்த அவரது கண்களில் லங்காபுரி தென்பட்டது. அந்நகரின் அழகு அவரை வெகுவாகக் கவர்ந்தது. லங்காபுரிக்கு சற்று தள்ளியிருந்த ஸ்வேல மலை மேல் இறங்கிய அவர், அங்கிருந்தபடியே லங்காபுரியை நன்கு நோட்டமிட்டார். அதன் செல்வ வளம் அவரை ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு காலத்தில் குபேரனின் தேசமாக இது விளங்கியது. குபேரனின் நாடு என்றால் கேட்கவா வேண்டும் செழிப்புக்கு?இங்குள்ள ராட்சதர்களுக்கு ராமபிரான் பெருமளவு செல்வத்தைக் கொடுத்து சீதையை மீட்டுச்செல்ல இயலாது. ஏனெனில், இங்கேயே அளவுக்கு மீறி செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இதில், மற்றவர்கள் தருவதை வாங்க வேண்டுமென்ற அவசியமே இல்லையே, என்று ஆஞ்சநேயரே நினைக்குமளவுக்கு லங்காபுரி சகல ஐஸ்வரியங்களுடன் திகழ்ந்தது.இந்த பணம் இருக்கிறதே...இது யார் புத்தியையும் மாற்றிவிடும், சாட்சாத் ஆஞ்சநேயப்பெருமானே, இலங்கையின் செல்வவளத்தை இவ்வளவு ஆய்வு செய்கிறான் என்றால் மற்றவர்களைக் கேட்கவா வேண்டும்? இப்போது, ஆஞ்சநேயர் இலங்கையின் செழிப்பு குறித்த நினைவை அகற்றி விட்டு, சீதாதேவி எங்கிருக்கிறாள் என்ற கவலை தொற்ற அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தார். இலங்கைக்குள் நுழைய அவர் ஆயத்தமானார். பகலில் உள்ளே சென்றால் ராட்சதர்கள் பிடித்து விடுவார்கள். மிக மிக குறுகிய வடிவெடுத்துச் சென்றால், மாடமாளிகைகளில் அவளைத் தேடுவது கஷ்டம். எனவே, இரவுப்பொழுதை தேர்ந்தெடுத்து உருவத்தை ஓரளவு சுருக்கிக் கொண்டு நுழையலாம் என காத்திருந்தார்.இவ்வளவு சிரமப்பட்டு இலங்கை வந்த பிறகு, ஏதாவது அவசரப்பட்டு செய்தால் என்னை புத்தியில்லாதவன் என உலகம் தூற்றும். அப்படி ஒரு அவப்பெயரை வாங்கி விடக்கூடாது, என்று ஆஞ்சநேயர் நினைத்தார்.ஒரு வழியாக இரவும் வந்தது. மாருதி தன் உருவத்தை ஒரு பூனையின் அளவுக்கு சுருக்கிக் கொண்டார். பூனை ஒன்று தான் சந்தடியில்லாமல் பதுங்கி வந்து பாலை பருகிவிட்டு ஓடிவிடும் பிராணி. அதனால் தான் சத்தமே இல்லாமல் உள்ளே நுழைய பூனையளவு உருவத்தை ஆஞ்சநேயர் விரும்பியிருக்கிறார்.பின்னர் மிக வேகமாக நகரத் திற்குள் நுழைந்தார். அந்த நகரத்திலுள்ள அரண்மனைகள் மின்னின. ஏனெனில், எங்கும் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட தூண்கள் அதில் இருந்தன. ஜன்னல் கதவுகளைக் கூட தங்கத்தால் செய்திருந்தார்கள்.

இதுபோன்று தான் ஆகாயத்திலுள்ள கந்தர்வ லோகம் இருக்குமாம். ஆனால், இவ்வாறு இருப்பது நல்லதல்ல என்பார்கள். சில நேரங்களில் வானத்தில் ஒரு வகை மேகக்கூட்டம் வரும். அது பார்ப்பதற்கு ரத்தினங்களில் இழைக்கப்பட்ட கோபுரம் போன்றும், அரண்மனைகள் போன்ற உருவத்திலும் வந்தால் அது பூமிக்கு நல்லதல்ல. மனிதர்கள், மிருகங்கள் இந்த மேகம் வரும் காலத்தில் பூமியில் விழுவார்கள். அவர்களின் ரத்தத்தை பூமி உறிஞ்சி விடும் என்பது சாஸ்திரம். இதை ஏன் இவ்விடத்தில் வால்மீகி சொல்கிறார் என்றால், தங்கமும், வைரமும் இழைக்கப்பட்ட இந்த இலங்கையும் இன்னும் சில நாட்களில் செந்நீர்க் காடாக மாறப் போகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு.அதிலும் சந்திரன் வானத்தில் தோன்றியவுடன், அவனது கிரணங்கள் பட்டு அந்த நகரம் இன்னும் ஜொலித்தது.இப்படிப்பட்ட அழகிய நகரை ரசித்துப் பார்த்து அவர் உள்ளே நுழையும் சமயத்தில், இங்கும் வந்து நின்றாள் கோர ரூபமுடைய ஒரு பெண்.அவள் கரகரத்த குரலுடன், ஏ குரங்கே! இங்கே எதற்கு வந்தாய்? யார் நீ? எங்கே போகிறாய்? என அதட்டினாள். ஆஞ்சநேயர் அந்தப் பெண்ணிடம், மாதரசியே! என்னைத் தடுத்து நிறுத்தி, இவ்வளவு கேள்விகள் கேட்கும் உன்னை யாரென்று தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவளுக்கு கோபம் அதிகமாகி விட்டது.நான் சொல்வதை சற்றும் பொருட்படுத்தாமல் என்னையே எதிர்த்து கேள்வி கேட்கிறாயா? ஏ குரங்கே! நான் இலங்கையைப் பாதுகாக்க ராவணேஸ்வரனால் நியமிக்கப்பட்ட காவல் தேவதை. என்னை மீறி யாரும் இந்நகருக்குள் செல்ல முடியாது. மீறினால் உயிர் போய்விடும், என்று அதட்டினாள்.இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆஞ்சநேயரை அவர் வரும் வழியில் தடுத்த எல்லாருமே பெண்கள். எதற்காக பெண்கள் மட்டும் ஆஞ்சநேயரைத் தடுக்கிறார்கள்?

 
மேலும் சுந்தரகாண்டம் »
temple news
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்
 
temple news
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்
 
temple news
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்
 
temple news
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் ... மேலும்
 
temple news
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar